செய்திகள் விளையாட்டு
2026 செபாக் தக்ராவ் உலகக் கோப்பை: சுவடுகள் பதித்த தேசிய அணி
கோலாலம்பூர்:
2026 செபாக் தக்ராவ் உலகக் கோப்பையின் குவாட்ரான் பிரிவின் சாம்பியனாக மலேசிய அணியின் வெற்றிக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி மலேசியாவின் பெயரை உலக அரங்கில் பிரகாசிக்கச் செய்தது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களின் உறுதிப்பாடு, ஒற்றுமை, சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றியைக் கைப்பற்றும் திறன் கொண்டவர்கள் மலேசியர்கள் என்பதையும் நிரூபித்துள்ளது என்று அவர் இன்று பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.
நேற்றிரவு இங்குள்ள தித்திவாங்சா அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியாவை 2-0 என்ற கணக்கில் வென்று, குவாட்ரான் பிரிவின் முதல் கோப்பையை மலேசியா வென்றது.
முஹம்மத் அஃபிஃபுதீன் முஹம்மத் ரசாலி, முஹம்மத் ஷாஹல்ரில் ஐமான் ஹலீம், அமிருல் ஜாஸ்வான் அமீர், ஐடில் ஐமான் அஸ்வாவி ஆகியோரைக் கொண்ட தேசிய அணி, 'செபாக் தக்ராவின் இல்லம்' என்றும் அழைக்கப்படும் அந்த அரங்கிற்குத் திரண்ட சுமார் 3,000 பார்வையாளர்களின் அசாதாரண ஆதரவின் மூலம் கூடுதல் ஊக்கத்தைப் பெற்றது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 10:51 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அர்செனல் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் வென்றது
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
May 17, 2026, 10:57 am
டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை
May 17, 2026, 10:21 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணத்தை அல் நசர் அணி இழந்துள்ளது
May 17, 2026, 10:19 am
