நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகளாவிய நெருக்கடியைத் தொடர்ந்து டிசம்பர் வரை எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய மலேசியா முயற்சிக்கிறது: துணைப் பிரதமர் ஃபடில்லா யூசுஃப்

புத்ராஜெயா:

உலகளாவிய விநியோக நெருக்கடியைத் தொடர்ந்து, பொருளாதார சங்கிலியைப் பாதித்து, எரிசக்தி செலவுகளை அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் எரிசக்தி விநியோகப் பாதுகாப்பு டிசம்பர் வரை தொடர்ந்து பேணப்படுவதை உறுதி செய்ய மலேசியா முயற்சித்து வருகிறது.

துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம், நீர் மாற்ற அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசுஃப், இதுவரை, நாட்டின் எரிசக்தி விநியோகம் ஜூலை வரை போதுமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதே நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து கூடுதல் விநியோக ஆதாரங்களைப் பெறுவது உள்ளிட்ட முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

"அனைத்து விநியோகமும் சேகரிக்கப்பட்டால், இன்ஷா அல்லாஹ், டிசம்பர் வரை எரிசக்தி விநியோகப் பாதுகாப்பைப் பெற முடியும்" என்று இன்று இங்கு நடைபெற்ற பெட்ரா மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் கூறினார்.

தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, ஒட்டுமொத்த பொருளாதாரச் சங்கிலியையும், குறிப்பாக தளவாடத் துறையைப் பாதித்து, செலவுகள் அதிகரிப்பதைக் கண்டுள்ளது. இது இறுதியில் பொருட்களின் விலைகள், விநியோகப் பாதுகாப்பின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஃபாடில்லா தெரிவித்தார்.

பேக்கேஜிங், பல்வேறு தொழில்துறைத் தேவைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போன்ற குறிப்பிட்ட மூலப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக, மருத்துவம், உற்பத்தி உள்ளிட்ட பிற துறைகளும் அந்த நெருக்கடியின் தாக்கத்தை உணர்வதாக அவர் கூறினார்.

"மலேசியா ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை என்று நாம் இன்னும் உணர்கிறோம். மலேசியாவின் நிலை அதுதான். இருப்பினும், நாம் இன்னும் இந்த வசதியான நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக பல தரப்பினர் உண்மையில் பணியாற்றி வருகின்றனர்" என்றார் அவர்.

அதன்படி, மின்சாரம், நீர் பயன்பாட்டில் சேமிப்பை உறுதி செய்வதன் மூலம் எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க, அனைத்து தரப்பினரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் என்று ஃபாடில்லா கூறினார்.

வாரந்தோறும் நடைபெறும் தேசிய பொருளாதார நடவடிக்கை சபையின் (எம்டென்) கூட்டங்கள் மூலம், பொருளாதாரத்தின் மீதான நெருக்கடியின் தாக்கத்தையும், செயல்படுத்தக்கூடிய தலையீட்டு நடவடிக்கைகளையும் அடையாளம் காண, அரசாங்கம் பல்வேறு துறைகளுடனும் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

சிறு, நடுத்தர தொழில்களின் (பி.கே.எஸ்) தொடர்ச்சியை உறுதி செய்வதோடு, வேலை இழப்பைத் தடுப்பதும், மக்கள் மீதான தாக்கத்தைக் குறைப்பதும் அந்த முயற்சிகளில் அடங்கும் என்றார் அவர்.

அதே நேரத்தில், எரிசக்தித் துறையின் மூன்று முக்கிய அம்சங்களுக்கும், அதாவது விநியோகப் பாதுகாப்பு, மக்கள் வாங்கக்கூடிய விலை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கும் அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்றார் அவர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset