செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
கடையநல்லூர்:
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் 21ஆம் நூற்றாண்டின் முதல் கால்நூற்றாண்டில் புனைந்துள்ள தமிழ்ச் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படவுள்ளன.
2000 முதல் 2025 வரை வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பாகத் நன்னூல் பதிப்பகத்தின் சார்பில் மணலி அப்துல் காதர், அவற்றை இரண்டு தொகுதிகளாக தொகுத்து பதிப்பித்துள்ளார்.
கடையநல்லூர் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஆதரவோடு நூல் வெளியீடு நிகழ இருக்கிறது.
‘கால் நூற்றாண்டுக்கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்’ என்பது நூலின் தலைப்பு.
தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சார்ந்த அந்தக் கதைகள், இஸ்லாமியப் பண்பாட்டு விழுமியங்களை எடுத்துக்காட்டுகின்றன.
சனிக்கிழமை (மே 23) மாலை 4 மணிக்குக் கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
நல்லாசிரியர் கே.எம். செய்யது மசூது தலைமையில் நடைபெறும் விழாவில், சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவரும் எழுத்தாளருமான அ. முஹம்மது பிலால் சிறப்புரையாற்றி நூலை வெளியிடுகிறார்.
நூலின் முதல் படியை மேலப்பாளையம் முஸ்லிம் கல்விக் குழுத் தலைவர் அல்ஹாஜ் எல்.கே.எஸ்.மீரான் முஹைதீன் பெற்றுக்கொள்வார். நாகர்கோவிலைச் சேர்ந்த நாவலாசிரியரும் எழுத்தாளருமான எம். மீரான் மைதீன் நூல் விமர்சன உரை நிகழ்த்துவார்.
மேலும், சிங்கப்பூரில் பல்லாண்டுகளாக மாணவர்களும் இளையர்களும் பேச்சுக்கலையில் திறன் பெற, ‘பேசும் கலை வளர்ப்போம்’ இயக்கம் மூலம் செயல்படும் எழுத்தாளரும் பட்டிமன்ற நடுவருமான அ. முஹம்மது பிலாலின் சேவையைப் பாராட்டும் விதமாக, இஸ்லாமிய இலக்கியக் கழகமும் நன்னூல் பதிப்பகமும் இணைந்து அவருக்கு ‘பேசும் கலை இயக்கப் புரவலர்’ என்ற சிறப்பு விருதை வழங்கவிருக்கின்றன.
சிறுகதைக் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர் இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்பது கதைகள் பிற மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளன. அதன்படி, குளச்சல் யூசுப் மொழிபெயர்ப்பில் மலையாளத்திலும் தெப்பளா சீனுவாஸ் மொழிபெயர்ப்பில் தெலுங்கிலும் கொழும்பு ஹுமைரா அல்அமீன் மொழிபெயர்ப்பில் சிங்களத்திலும் உருவாக்கப்பட்ட நூல்களும் விழாவில் வெளியாகின்றன.
நூல் வெளியீடு, சனிக்கிழமை (மே 23) மாலை 4 மணிக்குக் கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
