செய்திகள் தமிழ் தொடர்புகள்
அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்
சென்னை:
வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரின் சார்பாக அவையில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசும்போது முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடாமல் கருணாநிதியின் பெயரைக் கூறினார்.
அவர் பேசுகையில், "திருமங்கலம் பார்முலா முதல் 2026 வரை ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டம் வரை கருணாநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி திமுக உறுப்பினர் அடுக்கடுக்காக கூறி வந்தார். 2026ல் ஒரு ரூபாய்கூட ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் எங்கள் முதல்வர் ஆட்சிக்கு வந்திருக்கிறார்" என்றார்.
இதையடுத்து முன்னாள் முதல்வர் பற்றி கூறியது அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
இதையடுத்து, கருணாநிதி பெயர் சொல்லிப் பேசிய அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பாக முதல்வர் விஜய் பேரவையில் மன்னிப்பு கோரினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 16, 2026, 11:31 am
தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு முதல்வர் விஜய் வழங்கினார்
August 15, 2026, 11:38 am
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம்: முதல் முறையாக தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய்
August 13, 2026, 5:22 pm
5 மணி நேரமாக ஆலோசனை நடத்திய அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள்
August 12, 2026, 12:46 pm
சென்னை கடற்கரை உட்பட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி: தமிழக அரசு உத்தரவு
August 11, 2026, 9:58 am
