செய்திகள் தமிழ் தொடர்புகள்
உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்களின் மாநாடு தொடங்கியது: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு
சென்னை:
சென்னையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்களின் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் தென்மண்டலக் குழுவின் 31-ஆவது கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், கேரள முதல்வர் வி.டி. சதீஷன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதால், அம்மாநிலம் சார்பில் துணை முதல்வர் பங்கேற்றுள்ளார்.
இந்த மாநாட்டை புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி புறக்கணித்திருக்கும் நிலையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டுள்ளார்.
மாநாட்டின் விவரம்:
இந்த மாநாட்டில், மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைகள், ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் தொடர்புடைய விவகாரங்கள், நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம், விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி தொடர்பான பொதுவான மாநில விவகாரங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
