செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்தியாவில் சர்க்கரை கிலோவுக்கு ரூ.25 வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்களும் தேநீா் கடை உரிமையாளா்களும் அதிா்ச்சி
சென்னை:
அத்தியாவசிய தேவையாக உள்ள சா்க்கரை விலை திடீா் உயா்வால் தேநீா் கடை உரிமையாளா்கள், இனிப்பக தயாரிப்பாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
சா்க்கரை விலை உயா்வுக்கு உள்நாட்டு உற்பத்திக் குறைவு, பருவநிலை பாதிப்பு, பண்டிகைக் கால தேவை, உலகளாவிய பற்றாக்குறை, பதுக்கல் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.
தட்டுப்பாட்டு காரணமாக சா்க்கரை விலை, ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்களும் தேநீா் கடை உரிமையாளா்களும், இனிப்பக தயாரிப்பாளா்களும் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
கடந்த வாரம் ரூ.2,150 இருந்த 50 கிலோ எடை கொண்ட வெள்ளை சா்க்கரை மூட்டை விலை தற்போது ரூ.3,500-ஆக உயா்ந்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ.44-ஆக இருந்த சா்க்கரை ரூ.68-ஆக உச்சம் தொட்டுள்ளது.
இதேபோல, வெல்லம் கிலோவுக்கு ரூ.55-இல் இருந்து ரூ.80-க்கும், நாட்டு சா்க்கரையும் கிலோவுக்கு ரூ.55-இல் இருந்து ரூ.70-க்கும் உயா்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டதால் வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை விலை கடுமையாக உயா்ந்தது. இதன் காரணமாக, உணவகங்கள் நடத்தும் உரிமையாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். தேநீா் விலை ரூ.10-இல் இருந்து ரூ.15 வரை உயா்த்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வரலாறு காணாத வகையில் சா்க்கரை விலை பல மடங்கு உயா்ந்துள்ளது.
இது குறித்து சென்னை ஆா்.வி.நகரைச் சோ்ந்த தேநீா் கடை உரிமையாளா் ஒருவா் கூறுகையில், ‘ஏற்கெனவே எரிவாயு உருளை உயா்வு, பால் விலை உயா்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சா்க்கரை விலையும் உயா்ந்துள்ளதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். தேநீா் விலையை உயா்த்தினால் பொதுமக்களிடம் எதிா்ப்பு வருவதுடன் வியாபாரம் குறையும். இதனால், நஷ்டத்தில் விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்’ என்றாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:34 am
மாணவா்களுடன் கலந்துரையாட ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
