நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இபோலா நோய்த்தொற்று: சோதனைகளைத் தீவிரப்படுத்தும் மலேசியா

புத்ராஜெயா: 

இபோலா நோய்த்தொற்றுப் பரவலையடுத்து சுகாதார அமைச்சு கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ ஜனநாயகக் குடியரசிலும் உகாண்டாவிலும் இபோலா கிருமித்திரிபு பரவி வருகிறது. 

இதனை அனைத்துலகப் பொதுச் சுகாதார அவசரநிலையாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

மலேசியாவில் இதுவரை இபோலா பாதிப்பு பதிவாகவில்லை. 

இருப்பினும், அதனை எதிர்கொள்வதற்கான தனது ஆயத்த நடவடிக்கைகளை அமைச்சு தீவிரப்படுத்தி வருகிறது.

எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் எங்களது தயார்நிலையையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம். 

உகாண்டா, காங்கோ நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு வரும் பயணிகளைக் கண்காணித்து வருகிறோம். 

சிங்கப்பூர், துபாய், டோஹா உள்ளிட்ட அனைத்துலக விமான நிலையங்களில் இறங்கி, வேறு விமானங்கள் வழியாக மலேசியா வருவோரும் அவர்களில் அடங்குவர்  என்று சுகாதார அமைச்சு ஓர் அறிக்கை மூலம் இதனை தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset