நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தியாகப் பெருநாள் காலத்தில் 19 லட்சம் வாகனங்கள் பினாங்கிற்குள் நுழையும் அல்லது கடந்து செல்லும்

ஜார்ஜ்டவுன்:

தியாகப் பெருநாள் காலத்தில் 19 லட்சம் வாகனங்கள்  பினாங்கிற்குள் நுழையும் அல்லது கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பினாங்கு மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹஜிசி இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.

நீண்ட விடுமுறை, தியாகப் பெருநாள் உட்பட பல பண்டிகைக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, சுமார் 19 லட்சம் வாகனங்கள் பினாங்கு மாநிலத்திற்குள் நுழைந்து கடந்து செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து போலிஸ்படை, போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறை மூலம் முக்கிய இடங்களில் கண்காணிப்பு, அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்.

மே 27 முதல் 28 வரை வரும் தியாகப் பெருநாள், அதைத் தொடர்ந்து ஜூன் 31 முதல் 2 வரை வரும் விசாக தினம், மாட்சிமை தங்கிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு, நாடு முழுவதும் பொதுமக்களின் நடமாட்டமும் போக்குவரத்து நெரிசலும் கணிசமாக அதிகரிக்கும்.

ஆக பினாங்குப் பிரிவின் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையைச் சேர்ந்த மொத்தம் 145 அதிகாரிகள், பணியாளர்கள் நேரடியாக இதில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset