நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசம் கேள்விகளை எழுப்புகிறது: ரோஸி ரஸித்

கோலாலம்பூர்:

சமீபத்தில் நடைபெற்ற மலேசிய ஐக்கிய கட்சியின் தொடக்க விழாவில் ஆறு கெஅடிலான்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களின் இச் செயல் கட்சி மீதான அவர்களின் விசுவாசம் குறித்துக் கேள்விகளை எழுப்பும் ஒரு செயல்.

மக்களாலும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களாலும் ஒரு தலைவரின் அரசியல் திசையை மதிப்பிட முடியும்.

ஆகையால் இந்தச் செயலை இனி ஒரு சாதாரண அழைப்பை நிறைவேற்றுவதாக மட்டும் கருத முடியாது என்று கெஅடிலான் மகளிர் பிரிவின் துணைச் செயலாளர் ரோஸி ரஸித் கூறினார்.

கட்சி, கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமான நம்பிக்கை கூட்டணி 2026 மாநாடு நடைபெறும் அதே நேரத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றதால், அதில் அவர்களின் பங்கேற்பு இன்னும் அதிக ஏமாற்றத்தை அளித்தது.

பல தலைவர்கள் கட்சியுடன் இருந்து கூட்டணியின் போராட்டத்தை வலுப்படுத்தத் தேர்ந்தெடுத்த வேளையில், இந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு புதிய கட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுத்தனர்.

இது இனி ஒருவரின் கண்ணோட்டம் சார்ந்த விஷயமல்ல.

மாறாக இது அரசியல் நிலைப்பாடு விசுவாசம் சார்ந்த விஷயம்  என்று அவர் இன்று இரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset