நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிமென்ட் லோரியின் பின்புறம் கார் மோதியதில் மூவர் மரணம்: ஒருவர் படுகாயம்

கோலாலம்பூர்:

சிமென்ட் லோரியின் பின்புறம் கார் மோதியதில் மூவர் மரணமடைந்த வேளையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் இதனை தெரிவித்தார்.

இன்று அதிகாலை சுங்கை சின்சின் அருகே உள்ள காராக் நெடுஞ்சாலையின் 34வது கிலோமீட்டரில் கார் ஒன்று சிமென்ட் லோரியின் பின்புறத்தில் மோதியது.

இந்த சம்பவத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.

அதிகாலை 2.35 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தமக்கு அழைப்பு வந்தது.

பின்னர. 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு செலாயாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் விரைந்து அனுப்பப்பட்டனர்.

சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ​​சிமென்ட் லோரியின் பின்புறத்தில் மோதிய காரில் நான்கு பேர் சிக்கியிருந்தனர்.

27 வயதுப் பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயங்களும், இடது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. 

அதே நேரத்தில், 20 வயதுகளில் உள்ள மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset