செய்திகள் மலேசியா
மாணவிக்கு எதிரான ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் வழக்கு; விசாரணையை போலிசாரிடம் கல்வியமைச்சு ஒப்படைத்தது: ஃபட்லினா
புத்ராஜெயா:
ஆறாம் வகுப்பு மாணவிக்கு எதிரான ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் வழக்கு குறித்த விசாரணையை போலிசாரிடம் கல்வியமைச்சு ஒப்படைத்தது.
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
ஜொகூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து விசாரிக்க, கல்வியமைச்சு இவ்விவகாரத்தை போலிசாரிடம் ஒப்படைத்துள்ளது.
விசாரணை நடைபெறும் வரை, சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
அதே வேளையில் உள் விசாரணை தொடர்கிறது.
மேலும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் கல்வியமைச்சு சமரசம் செய்துகொள்வதில்லை என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு மாசாய் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், ஆசிரியர் ஒருவருக்கும் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவிக்கும் இடையே நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த ஒரு அம்பலப்படுத்தல் சமூக ஊடகங்களில் வைரலானது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
