நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 மலேசியர்கள் பாதுகாப்பாக இஸ்தான்புல்லுக்கு வந்தடைந்தனர்

கோலாலம்பூர்:

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 மலேசியர்கள் பாதுகாப்பாக இஸ்தான்புல்லுக்கு வந்தடைந்தனர்.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ  முஹம்மத் ஹசான் இதனை உறுதிப்படுத்தினார்.

குளோபல் சுமுத் புளோட்டிலா 2.0 மனிதாபிமானப் பணியில் பங்கேற்றபோது, ​​அனைத்துலக கடல் பகுதியில் இஸ்ரேலால் 29 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 5.45 மணிக்கு துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் பாதுகாப்பாக வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். 

இருப்பினும், ஐந்து ஆண்கள் உட்பட ஆறு பங்கேற்பாளர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன, என்று அவர் சற்று நேரத்திற்கு முன்பு வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset