செய்திகள் மலேசியா
மலேசியாவுடனான உறவுகளை வலுப்படுத்த இலங்கை உறுதியளித்துள்ளது
கோலாலம்பூர்:
உயரிய ஈடுபாடு மூலம் நீடித்த நட்பை வளர்த்து மலேசியாவுடனான பல்வேறு அம்ச உறவுகளை மேலும் முன்னேற்றுவதற்கான இலங்கை நாட்டின் அர்ப்பணிப்பை மலேசியாவுக்கான இலங்கை உயர் ஆணையர் தர்ஷனா எம். பெரேரா, வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்தானா நெகாராவில் நேற்று முன்தினம் நடைபெற்ற பணி ஒப்படைப்பு விழாவில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் பெரேரா இந்த விஷயத்தைச் சமர்ப்பித்ததாக, இலங்கை உயர் ஆணையம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசியாவிற்கான ஏழு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்கள் நற்சான்றிதழ்களை மாமன்னரிடம் சமர்ப்பித்ததில், அந்த உயர் ஆணையரும் ஒருவராவார்.
பெரேரா, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கின் வாழ்த்துக்களையும், நலம் பற்றிய விசாரிப்புகளையும், மலேசிய மக்களின் அமைதி, செழிப்புக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
"மாமன்னர், 1957 ஆம் ஆண்டு முதல் மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்தார். பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
"சமீபத்திய ஆண்டுகளில் உயரிய பயணங்களைப் பரிமாறிக்கொள்வது, இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பகிரப்பட்ட நலன் கொண்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்றும் யாங் டி பெர்துவான் அகோங் மாமன்னர் வலியுறுத்தினார்" என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
30 வருட இராஜதந்திர வாழ்க்கையில், ஸ்வீடன், இந்தோனேசியா, ஆசியான் நாடுகளுக்கான தூதராகவும், ரோம், மாஸ்கோ, பாங்காக், நியூயார்க், வாஷிங்டன் டிசி ஆகிய இடங்களில் பிற இராஜதந்திர பதவிகளிலும் பணியாற்றிய அனுபவம் பெரேராவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 11:06 am
மலேசியாவிற்குள் எபோலா ஊடுருவவில்லை: சுகாதார அமைச்சு
May 19, 2026, 6:08 pm
கழுத்தில் குத்தப்பட்ட பெண், 10 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உயிர்ப்பிழைத்தார்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
