செய்திகள் மலேசியா
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
கோலாலம்பூர்:
உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக பட்ஜெட் குறைப்புகளால் விளையாட்டுத் திட்டங்களும், விளையாட்டு வீரர்களின் நலனும் பாதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
அனைத்துத் தரப்பு மலேசியர்களையும் ஒன்றிணைப்பதில் விளையாட்டு வகிக்கும் முக்கிய பங்கையும், சமீபத்திய ஆண்டுகளில் தேசிய விளையாட்டு வீரர்கள் அடைந்த சிறந்த சாதனை முடிவுகளையும் அன்வர் குறிப்பிட்டார்.
"விளையாட்டில் நாம் வெற்றிபெற விரும்பினால், விளையாட்டு வீரர்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்" என்று இன்று இங்கு நடைபெற்ற தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழாவில் தனது உரையில் அன்வர் இவ்வாறு கூறினார்.
"நாங்கள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்கள் இருந்தபோதிலும், நிகழ்வுகள், திட்டங்கள், விளையாட்டுத் துறையில் நலன் ஆகியவை பாதுகாக்கப்படும் என்று இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் டாக்டர் தௌஃபிக் ஜொஹாரிக்கு நான் உறுதியளித்துள்ளேன்," என்றார் அவர்.
இருப்பினும், விளையாட்டுத் துறையில் தேவையற்ற செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்று அன்வர் வலியுறுத்தினார்.
பாரம்பரியமாக ஆடம்பர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா, இன்று இங்குள்ள தேசிய விளையாட்டு வளாகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட்டது.
"பொருளாதார மந்த நிலையால் நாங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், நாங்கள் விடுபடவில்லை, அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்று அன்வர் மேலும் கூறினார்.
"திட்டங்களை நடத்தும் போது செலவுகளைச் சேமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
"இளைஞர், விளையாட்டு அமைச்சு, தேசிய விளையாட்டு கவுன்சில் (NSC) ஆகியவை இத்தகைய இனிமையான விழாவை ஒன்றிணைத்ததற்காக நான் வாழ்த்துகிறேன்.
விழாவின் போது, முதல் நான்கு வகைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்வர் விருதுகளை வழங்கினார்.
பூப்பந்து வீரர்கள் சென் டாங் ஜீ, டோ எஈ வே ஆகியோர் முறையே ஆண்டின் சிறந்த ஆண், பெண் விளையாட்டு வீரர் விருதுகளை வென்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆண்டின் சிறந்த ஆண், பெண் விளையாட்டு வீரர் விருதுகள் முறையே டிராக் சைக்கிள் ஓட்டுநர் யூசுஃப் ஹஃபிசி ஷாஹாருதீன், நீச்சல் வீராங்கனை லிம் கார்மென் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
முக்கிய வகைகளில் வெற்றி பெற்றவர்கள், தலா ஒரு கோப்பையுடன் 20,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தைப் பெற்றனர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 6:08 pm
கழுத்தில் குத்தப்பட்ட பெண், 10 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உயிர்ப்பிழைத்தார்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
