செய்திகள் மலேசியா
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
ஷா ஆலம்:
“பாண்டான் நாடாளுமன்றத் தொகுதி தொடர்ந்து பி.கே.ஆர்-இன் இரும்புக் கோட்டையாகவே நீடிக்க வேண்டும்,” பிரதமரும் மக்கள் நீதிக் கட்சியின் (பி.கே.ஆர்) தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், பாண்டான் கிளைத் தலைவர்களிடம் இவ்வாறு வலியுறுத்தினார்.
ஜொகூர் பாருவில் அண்மையில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் (PH) 2026 மாநாட்டின் போது, அன்வர் உட்பட பாண்டான் பி.கே.ஆர் தலைவர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றதாக பி.கே.ஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
“மாநாடு முடிந்து புறப்படும் முன், பிரதமரையும் பாண்டான் பி.கே.ஆர் தலைமைத்துவத்தையும் சந்திக்க ஏற்பாடு செய்தேன். அந்த சந்திப்பில், பாண்டான் தலைவர்கள் கட்சிக்கு தங்களின் முழு விசுவாசத்தையும் உறுதியளித்தனர்,” என்று ஜாஃப்ருல் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
“ஒற்றுமையை உடைக்காதீர்கள்.பாண்டான் தொகுதி தொடர்ந்து பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்,” என பிரதமர் கடுமையான அரசியல் அறிவுறுத்தலை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், அவர் தனது நாடாளுமன்ற ஆசனத்தையும் காலி செய்ததுடன், தற்போது “பெர்சாமா” கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று, வரவிருக்கும் 16வது பொதுத் தேர்தலில் (PRU16) மீண்டும் பாண்டான் தொகுதியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற பி.கே.ஆர் உள்தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரஃபிஸி பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்தும் விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 6:08 pm
கழுத்தில் குத்தப்பட்ட பெண், 10 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உயிர்ப்பிழைத்தார்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
