செய்திகள் மலேசியா
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
கோத்தா கினபாலு:
மறைந்த சாரா கைரினா மகாதீரின் தாயை அவதூறு செய்யும் கதையைத் தொடங்கியதாகக் கூறப்படும் சமூக ஊடகப் பயனர்கள் உள்ளிட்ட பல நபர்களின் பட்டியலை, மேலும் அவரது நாட்குறிப்பின் உள்ளடக்கங்களைப் பகிர்ந்தவர்களை, கரோனர் நீதிமன்றத்தில் சாட்சி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
46 வயதுடைய 71ஆவது சாட்சியும், இறந்த சாராவின் தாயின் மைத்துனியுமான நூர் ஷிரா அப்துல்லாஹ், இன்று வழக்கறிஞர் ஷாலான் ஜுப்ரியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக இந்த விஷயத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த செப்டம்பரில் சாரா கைரினாவின் மரண விசாரணை தொடங்குவதற்கு முன்பே, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பல கருத்துகளைத் தாம் பதிவு செய்ய முடிந்ததாக நூர் ஷிரா கூறினார்.
"நான் வழக்கறிஞரிடம் காண்பித்த ஆவணம், நான் சமூக ஊடகங்களில் திரைப்பிடிப்பைப் பதிவு செய்த சில கருத்துகள் குறித்ததாகும்.
"இந்தக் கருத்துகள் பெரும்பாலும், சாரா கைரினாவின் தாயார் நோரைடா லாமத்திற்கு எதிரான மோசமான கதையைத் தொடங்கிய சமூக ஊடகப் பக்கங்களிலிருந்து வந்தவை.
"அதன்பின்னர், சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்குவதற்கு முன், டிக் டாக்கில் உள்ள அகப்பக்கம் ஒன்று நாட்குறிப்பின் உள்ளடக்கங்களைக் காண்பித்தது" என்று கரோனர் அமிர் ஷா அமிர் ஹசன் முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது அவர் கூறினார்.
கடந்த செப்டம்பரில் விசாரணை தொடங்கியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தங்களின் அனைத்துப் பதிவுகளையும் நீக்கிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அவரது சாட்சியத்தில் சமூக ஊடகத்தில் பிரபலமான நபர் ஒருவர், விசாரணையில் உள்ள சில குழந்தைகளின் பெற்றோர் சாட்சிகளுக்கு, ஆசிரியருக்கும் பள்ளிக்கும் இடையிலான இடைத்தரகராகத் தன்னைக் கூறிக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
"அவருக்கும் அந்தப் பள்ளிக்கும் சம்பந்தம் இல்லை. அவர் கவுன்சிலிங்கில் பட்டம் பெற்றிருப்பவர், ஆனால் அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட கவுன்சலர் அல்ல என்பதை நான் விசாரித்து தெரிந்து கொண்டேன்.
"மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க, பள்ளி நிர்வாகம் ஏன் ஒரு சான்றளிக்கப்படாத ஒருவரைப் பயன்படுத்துகிறது?" என்று அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
சாரா கைரினாவின் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், குடும்பத்தினரிடமிருந்து, தங்கள் குடும்பத்தினருக்கு எதிரான கருத்துகளும் தூண்டுதல்களும் இருந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
"அவர்களின் பெரும்பாலான கருத்துகள், சாரா கைரினாவின் தாய், தனது மகளின் மரணம் kகுறித்து விளம்பரம் செய்ய விரும்புவதாகக் குற்றம்சாட்டுகின்றன" என்றார் அவர்.
இதற்கு முன்னர், அவரது எழுத்துப்பூர்வ சாட்சியத்தில், சிறுவயதிலிருந்தே சாரா கைரினாவுக்கும், அவரது தாய்க்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமாக நன்முறையில் இருந்ததாக அவர் கூறினார்.
"சாராவுக்கும், அவரது தாய்க்கும் இடையில் நான் ஒருபோதும் தீவிரமான சண்டையைப் பார்த்ததில்லை, அல்லது சாரா பயந்து, தனது தாயிடமிருந்து விலகி இருப்பதைப் பார்த்ததில்லை" என்றார் அவர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
