செய்திகள் மலேசியா
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
கோலாலம்பூர்:
ஆண்களை உள்ளடக்கிய பாலியல் தொல்லை வழக்குகள் 2024 ஆம் ஆண்டில் 27-ஆக இருந்ததிலிருந்து கடந்த ஆண்டில் 45-ஆக அதிகரித்துள்ளது.
மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சின் (KPWKM) கீழ் உள்ள பாலியல் தொல்லை எதிர்ப்புத் தீர்ப்பாயத்தின் (TAGS) தரவுகள், இந்த ஆண்டு மே 17 வரை, ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 24-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தியுள்ளன.
பாலியல் தொல்லை என்பது பெண்களை மட்டும் உள்ளடக்கியதல்ல, அது ஆண்களையும் பாதிக்கிறது என்பதற்கு இந்தச் சூழ்நிலை சான்றாகும் என்று மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி ஷுக்ரி கூறியுள்ளார்.
"நாம் அனைத்து பாலினங்களையும் மதிக்க வேண்டும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி. தொந்தரவு செய்யப்படும் பெண்களைப் போலவே, ஆண்களும் நடத்தப்பட விரும்புவதில்லை.
"எனவே, இந்த விஷயம் தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டும். இதனால், இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டால், மக்கள் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை அறிவார்கள்" என்று இன்று இங்கு நடைபெற்ற 'Program Toleransi Sifar Keganasan: Say No To Sexual ஹராஸ்சமென்ட்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த உரையில், கடந்த ஏப்ரல் 26 வரையிலான TAGS அறிக்கைகளின் அடிப்படையில், 92 புகார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 69 வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டதாகவும் நான்சி கூறினார்.
மேலும், மலேசிய காவல் துறையின் புள்ளிவிவரங்கள், பாலியல் தொல்லை வழக்குகளுக்கான கவலைக்கிடமான அதிகரிப்புப் போக்கைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டில் 477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2023 ஆம் ஆண்டில், அது 522 வழக்குகளாக அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டில், அது 788 ஆக உயர்ந்தது, கடந்த ஆண்டில் 1,038 வழக்குகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
"இந்த தொடர்ச்சியான அதிகரிப்பு, இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடைந்து வருவதைத் தெளிவாகக் காட்டுகிறது. இதனை களைய உறுதியான நடவடிக்கையும், சமூகத்தின் முழுமையான விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.
"அதிகரித்து வரும் புகார்கள், சமூகத்தின் விழிப்புணர்வு அளவைப் பிரதிபலிக்கின்றன. மக்கள் அதிகாரிகளிடம் வழக்குகளைப் புகாரளிக்கவும், தங்கள் உரிமைகளைக் கோரவும் முன்வருகிறார்கள்" என்றார் அவர்.
பாலியல் தொல்லைப் பிரச்சினையைச் சமாளிக்க, 2022 ஆம் ஆண்டின் பாலியல் தொல்லை எதிர்ப்புச் சட்டத்தை (சட்டம் 840) உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதாக நான்சி கூறினார்.
அந்தச் சட்டத்தை செயல்படுத்துவது, தடுப்பு, நடவடிக்கை நடைமுறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான விரிவான பாதுகாப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய விரிவான வழிகாட்டுதல்கள் மூலம் வலுப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 6:08 pm
கழுத்தில் குத்தப்பட்ட பெண், 10 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உயிர்ப்பிழைத்தார்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
