நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனை

கோலாலம்பூர்:

டச்ட்ரோனிக்ஸ் 86ஆவது பரதன் கிண்ணத்தை வென்று சிலாங்கூர் அணியினர் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

மலேசிய இந்தியர் விளையாட்டுப் பேரவையினர் பரதன் கிண்ண கால்பந்து போட்டியை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் 86ஆவது பரதன் கிண்ண கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இப்போட்டியின் இறுதியாட்டத்தில் சிலாங்கூர் அணியினர் மலாக்கா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன.

இதைத் தொடர்ந்து ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெனால்டியில் சிறந்து விளங்கிய சிலாங்கூர் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் மலாக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து சிலாங்கூர் அணியினர் 86ஆவது பரதன் கிண்ணத்தையும் 20,000 ரிங்கிட்டையும் தட்டிச் சென்றனர்.

இரண்டாவது இடத்தை பிடித்த மலாக்கா அணியினருக்கு 10,000 ரிங்கிட் பரிசாக வழங்கப்பட்டது.

அடுத்த இரண்டு இடங்களை பெர்லிஸ், போலிஸ்படை அணியினர் தட்டிச் சென்றனர்.

எப்ஏஎம் கௌரவ தலைவர் டான்ஸ்ரீ ஹமிடின் ஹமின், நடப்பு தலைவர் டத்தோ வீரா முகமத் யூசுப் மஹாடி, துணைத் தலைவர் டத்தோ சிவசுந்தரம்,  மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் தலைவர் டத்தோ சுப்ரா ரத்தினவேலு, ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ பதி உட்பட பல பிரமுகர்கள் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset