செய்திகள் மலேசியா
மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதித்த திருக்குறள் முழக்கம்
தஞ்சோங் ரம்புத்தான்:
தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை முயற்சி ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
உலகப்பொதுமறையான 1,330 திருக்குறள்களையும் ஒப்புவித்து மாணவர்கள் மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதித்து அசாத்தினர்.
மலேசியாவின் 8 மாநிலங்களைச் சேர்ந்த 1,462 பங்கேற்பாளர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து திறக்குறளை ஒப்பிவித்து இந்த அரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதில் 156 தமிழ்ப்பள்ளிகள், 120 தேசிய வகை இடைநிலைப்பள்ளிகள், 85 தேசியப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று திருகுறளை ஒப்பிவித்தனர்.
பண்பாட்டு ஒற்றுமையின் அடையாளம்
நேற்று காலை மணி 8க்கு தொடங்கி மாலை 4:30 மணி வரை தொய்வின்றி நடைபெற்ற இந்நிகழ்வில், கிட்டத்தட்ட 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு பேராதரவு வழங்கினர்.
இந்த அமோக ஆதரவு, தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது நம் சமூகம் கொண்டுள்ள ஒற்றுமையையும், அர்ப்பணிப்பையும், எல்லையற்ற அன்பையும் உண்மையாகவே பிரதிபலிக்கிறது என்று தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் செல்வம் கூறினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி, எதிர்கால சந்ததியினர் திருக்குறளின் அழியா வாழ்வியல் நெறிகளைப் போற்றி வளர்க்கவும், நம் நாட்டின் பல்லின கலாச்சார நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தவும் ஒரு பெரும் தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை என்கிறார் இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் விக்னேஸ்வரன் ஐயப்பன் .
இப்பெருமைமிக்க சாதனைக்காக உழைத்த ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் இந்த நிகழ்வில் சிறப்பு வருகை அளித்த பேரா ஆட்சிக் குழு உறுப்பினரின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட அவரின் சிறப்பு அதிகாரி உ. முத்துசாமி வெற்றிகளும், உரிய அங்கீகாரங்களும் உலக அளவில் கிடைக்க மனதார பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.
மேலும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் 20 ஆயிரம் ரிங்கிட் வழங்கியுள்ளதாக முத்துசாமி தெரித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2026, 10:31 pm
மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் தியாகப் பெருநாளை மே 27ஆம் தேதி கொண்டாடுவார்கள்
May 17, 2026, 10:29 pm
முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த தயார்: டத்தோஸ்ரீ அன்வார்
May 17, 2026, 5:16 pm
மலேசிய ஐக்கிய கட்சியின் பொறுப்பை ரபிசி, நிக் நஸ்மி ஏற்கின்றனர்
May 17, 2026, 5:06 pm
புட்சால் போட்டி; இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ சரவணன்
May 17, 2026, 3:32 pm
