செய்திகள் மலேசியா
புட்சால் போட்டி; இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ சரவணன்
தாப்பா:
புட்சால் விளையாட்டு போட்டி இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துகிறது என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
உடல் வலிமையை சோதிப்பது மட்டுமின்றி, ஒற்றுமையை வளர்ப்பதற்கும், உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த தளமாக புட்சால் விளையாட்டு திகழ்கிறது.
தாப்பாவில் நடைபெற்ற 19ஆவது ஆண்டுக்கான டத்தோஸ்ரீ எம். சரவணன் 12 வயதுக்குட்பட்டோருக்கான புட்சால் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மதிப்புமிக்க போட்டியில் பேரா மாநிலம் முழுவதிலுமிருந்து 24 தமிழ்ப்பள்ளி குழுக்கள் பங்கேற்றுள்ளன.
எதிர்கால இளம் விளையாட்டாளர்களை உருவாக்குவதற்காக இப்போட்டியை முன்னின்று நடத்திய தாப்பா, கம்போங் பகாங் இந்திய சமூக பொழுதுபோக்கு கழகத்திற்கு எனது பாராட்டுகள்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து இளம் வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
விளையாட்டு உணர்வுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2026, 5:16 pm
மலேசிய ஐக்கிய கட்சியின் பொறுப்பை ரபிசி, நிக் நஸ்மி ஏற்கின்றனர்
May 17, 2026, 3:32 pm
எம்ஐபிபி கட்சி 12 நாடாளுமன்றம், 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட இலக்கு: புனிதன்
May 17, 2026, 12:58 pm
ஜொகூர் மாநில சட்டமன்றம் மே 24ஆம் தேதி கலைக்கப்படுமா?
May 17, 2026, 11:56 am
ஜோ லோவின் பொது மன்னிப்பை ஆதரிக்க மாட்டோம் என அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது: பிரதமர்
May 17, 2026, 11:52 am
ஹம்ஸாவிற்குப் பதிலாக சம்சூரியை எதிர்க்கட்சித் தலைவராக தேசியக் கூட்டணி நியமித்தது
May 17, 2026, 11:03 am
