செய்திகள் மலேசியா
ஜொகூர் மட்டுமல்ல, மற்ற அனைத்து மாநிலத் தொகுதிகளிலும் போட்டியிட நம்பிக்கை கூட்டணி தயாராக உள்ளது: அன்வார்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மட்டுமல்ல, மற்ற அனைத்து மாநிலத் தொகுதிகளிலும் போட்டியிட நம்பிக்கை கூட்டணி தயாராக உள்ளது.
பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அடுத்த தேர்தலுக்கு முன்னதாக தேசிய முன்னணி மாபெரும் தேர்தல் சவாலைத் தொடர்ந்தால்,
நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பினாங்கு, பகாங், ஜொகூர் உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட நம்பிக்கை கூட்டணி தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
நம்பிக்கை கூட்டணி தனது அரசியல் வியூகம் குறித்து பல மாதங்களாக விவாதித்து வருகிறது.
மேலும் மற்ற கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்தால், உறுதியான பதிலடி கொடுக்கும்.
மற்ற கட்சிகள் மோதல் பாதையைத் தேர்ந்தெடுத்தால், அதே வழியில் பதிலளிப்பதைத் தவிர நம்பிக்கை கூட்டணிக்கு வேறு வழியில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2026, 10:31 pm
மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் தியாகப் பெருநாளை மே 27ஆம் தேதி கொண்டாடுவார்கள்
May 17, 2026, 10:29 pm
முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த தயார்: டத்தோஸ்ரீ அன்வார்
May 17, 2026, 5:16 pm
மலேசிய ஐக்கிய கட்சியின் பொறுப்பை ரபிசி, நிக் நஸ்மி ஏற்கின்றனர்
May 17, 2026, 5:06 pm
புட்சால் போட்டி; இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ சரவணன்
May 17, 2026, 3:32 pm
