செய்திகள் மலேசியா
மலேசிய ஐக்கிய கட்சியின் பொறுப்பை ரபிசி, நிக் நஸ்மி ஏற்கின்றனர்
பெட்டாலிங் ஜெயா:
முன்னாள் அமைச்சர்களான ரபிசி ரம்லி, நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் மலேசிய ஐக்கிய கட்சியின் பொறுப்பை ஏற்க உள்ளனர்.
தமக்கும் தங்கள் ஆதரவாளர்களுக்கும் ஒரு புதிய அரசியல் திசையை வகுக்கும் முயற்சியாக அவர்கள் இம் முடிவை எடுத்துள்ளனர்.
பெட்டாலிங்ஜெயாவில் 2,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் முன்னிலையில், மலேசிய ஐக்கிய கட்சியின் நிறுவனரும் தலைவருமான டான் ஜின் தீம், ரபிசி, நிக் நஸ்மிக்கு கட்சியின் பதிவுச் சான்றிதழை அடையாளப்பூர்வமாக வழங்கினார்.
பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் முன்னாள் கெஅடிலான் துணைத் தலைவராகவும் உள்ள ரபிசி கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான சிறந்த வழியைத் தேடுவதாகக் கூறிய ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே, ஏற்கனவே உள்ள ஒரு கட்சியைப் பொறுப்பேற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மலேசிய ஐக்கிய கட்சி 2016/டிசம்பர் 2ஆம் தேதி பினாங்கில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது.
இது, அரசாங்கம், எதிர்க்கட்சி ஆகிய இரண்டிற்கும் ஒரு கட்டுப்பாடு சமநிலை முகவராகச் செயல்படுவதற்காக ஒரு மூன்றாம் கட்சியாக நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2026, 5:06 pm
புட்சால் போட்டி; இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ சரவணன்
May 17, 2026, 3:32 pm
எம்ஐபிபி கட்சி 12 நாடாளுமன்றம், 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட இலக்கு: புனிதன்
May 17, 2026, 12:58 pm
ஜொகூர் மாநில சட்டமன்றம் மே 24ஆம் தேதி கலைக்கப்படுமா?
May 17, 2026, 11:56 am
ஜோ லோவின் பொது மன்னிப்பை ஆதரிக்க மாட்டோம் என அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது: பிரதமர்
May 17, 2026, 11:52 am
ஹம்ஸாவிற்குப் பதிலாக சம்சூரியை எதிர்க்கட்சித் தலைவராக தேசியக் கூட்டணி நியமித்தது
May 17, 2026, 11:03 am
