நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஐபிபி கட்சி 12 நாடாளுமன்றம், 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட இலக்கு: புனிதன்

ஈப்போ:

எம்ஐபிபி கட்சி 12 நாடாளுமன்றம், 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட இலக்கு கொண்டுள்ளது.

ஈப்போவில் நடைபெற்ற உறவுகள் மேடை நாடக நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் தலைவர் புனிதன் கூறினார்.

மலேசிய இந்திய மக்கள் கட்சி வந்து பொதுவாகவே நாங்கள் ஒரு அரசியல் கட்சியாக அரசியல் ஈடுபாட்டில் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறோம். 

குறிப்பாக தேர்தலை முன்னிட்டு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 

நாடு தழுவிய ரீதியில் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறோம். 

மாநில தலைவர்களையும் சந்தித்து ஆலோசனைகள் நடத்தி வருகிறோம். தற்போது பேரா மாநிலத்திற்கும் வந்திருக்கிறோம்.

ஒவ்வொரு வாரமும் பல மாநிலங்களில் சமூகத்தைச் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

அவற்றில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறோம்.

ஏனெனில் சமூகத்துடன் இணைந்தே செயல்படுவது எங்களுடைய முக்கிய பொறுப்பு. 

அரசியலைத் தாண்டி சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய ஒரு கட்சியாக மலேசிய இந்திய மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.

இந்த சனி, ஞாயிறு மட்டும் பார்த்தாலும் பேரா மாநிலத்தில் ஐந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம். மக்களோடு மக்களாக இணைந்து செயல்படுகிறோம். 

இவை அரசியல் சாராத சமூக நிகழ்ச்சிகளாக இருந்தாலும், தேர்தலை முன்னிட்டு அரசியல் ரீதியான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தற்போது எங்களுடைய தொகுதி ஒதுக்கீடுகளை இறுதி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற தேசிய உச்சமன்றக் கூட்டத்திலும் தேர்தலை மையமாகக் கொண்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

இதுவரை 12 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 20 சட்டமன்ற தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

எந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதையும் ஆராய்ந்து வருகிறோம். எங்களுடைய நோக்கம் வெறும் போட்டியிடுவது மட்டும் அல்ல.

இந்திய சமூகத்திற்கு வலுவான பிரதிநிதித்துவத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ள தொகுதிகளையே முன்னுரிமையாக பார்க்கிறோம்.

இந்தியர்களின் குரல் நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என்று புனிதன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset