செய்திகள் மலேசியா
மத்தியில் கூட்டணி அரசு என்றாலும் ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணியின் ஆட்சி தொடர வேண்டும்: ரவீன்குமார்
ஜொகூர்பாரு:
மத்தியில் கூட்டணி அரசு என்றாலும் ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணியின் ஆட்சி தொடர வேண்டும்.
ஜொகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் மாநில மஇகா தலைவருமான ரவீன்குமார் கூறினார்.
ஜொகூர் மாநில அரசாங்கம் தேசிய முன்னணி நிர்வாகத்தின் கீழ் தொடர வேண்டும்.
மத்திய அரசு அளவில் உள்ளது போன்ற ஒருமைப்பாடு அரசாங்கம் என்ற கருத்தின் கீழ் அல்லாமல், ஜொகூர் தொடர்ந்து தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஜொகூரில் தேசிய முன்னணிக்கு மக்கள் வழங்கிய ஆணை தெளிவாகவும் வலுவாகவும் உள்ளது.
இதனால் ஜொகூர் மாநில அரசாங்கம் மாநில நிர்வாகத்தில் ஒருமைப்பாடு அரசாங்கம் என்ற கருத்தைப் பின்பற்றுவதில்லை.
ஆக ஜொகூரில் அரசியல் நிலைத்தன்மை, வளர்ச்சியின் தொடர்ச்சி, மக்களின் நலன் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அதற்கு ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் 56 இடங்களிலும் முழு நம்பிக்கையுடன் தேசிய முன்னணி தொடர்ந்து போட்டியிடும்.
மந்திரி புசார் ஓன் ஹபீஸ் காஸி தலைமையிலான ஜொகூர் அரசாங்கம், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருவதற்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும், மக்களின் நல்வாழ்வு தொடர்ந்து ஒரு முன்னுரிமையாக இருப்பதில் உறுதியாக உள்ளது.
மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு அரசியல் நிலைத் தன்மைமையை ஒரு முக்கிய அடித்தளம் என்று ஜொகூர் தேசிய முன்னணி நம்புகிறது.
எனவே, அடுத்த தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் முழு அமைப்பும் தனது பணிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி, மக்களை அணுகி, அடிமட்ட ஆதரவைத் தீவிரப்படுத்தும்.
கடந்த தேர்தலில் ஜொகூர் மக்கள் வழங்கிய மாபெரும் ஆணையின்படி, மாநிலத்தின் நிலைத்தன்மைக்கும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் போராடும் கொள்கையில் ஜொகூர் தேசிய முன்னணி உறுதியாக உள்ளது.
மேலும் ஜொகூரில் தேசிய முன்னணி தனித்து போட்டியிட மாநில மஇகா முழு ஆதரவை வழங்குகிறது.
ஜொகூர் மாநில மஇகாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாசாபா கருத்தரங்கில் பேசிய ரவீன்குமார் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2026, 10:31 pm
மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் தியாகப் பெருநாளை மே 27ஆம் தேதி கொண்டாடுவார்கள்
May 17, 2026, 10:29 pm
முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த தயார்: டத்தோஸ்ரீ அன்வார்
May 17, 2026, 5:16 pm
மலேசிய ஐக்கிய கட்சியின் பொறுப்பை ரபிசி, நிக் நஸ்மி ஏற்கின்றனர்
May 17, 2026, 5:06 pm
புட்சால் போட்டி; இளைஞர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ சரவணன்
May 17, 2026, 3:32 pm
