நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் தியாகப் பெருநாளை மே 27ஆம் தேதி கொண்டாடுவார்கள்

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் மே 27ஆம் தேதி தியாகப் பெருநாளை கொண்டாடுவார்கள்.

ஆட்சியாளர்கள் மாநாட்டின் தற்காலிக உதவிச் செயலாளர் முஹம்மது அஃபெண்டி ஜலாலுடின் இதனை கூறினார்.

இன்று இரவு ஆர்டிஎம்மில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிவிப்பின் மூலம், ஹிஜ்ரி 1-ஆம் தேதியான 1 துல்ஹிஜா 1447, நாளை திங்கட்கிழமை வரும் என்று அவர் அறிவித்தார்.

மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆணை, ஆட்சியாளர்களின் ஒப்புதலுக்குப் பிறகு மலேசிய ஆட்சியாளர்களின் பெரும் முத்திரை காப்பாளர் சார்பாக நான்,

ஹிஜ்ரி 1-ஆம் தேதியான 1 துல்ஹிஜா 1447, கி.பி. 2026 மே 18ஆம் தேதி வரும் என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்.

எனவே, மலேசியா முழுவதிலும் உள்ள மாநிலங்களுக்கான துல்ஹிஜ்ஜா 10 ஆம் தேதியன்று வரும் தியாகப் பெருநாள் மே 27, புதன்கிழமை அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset