நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர்களை ஒன்றுப்படுத்த அதிகமான அரசியல் கட்சிகள் தேவையில்லை; கல்வி மட்டும் போதும்: சுரேன் கந்தா

பெட்டாலிங்ஜெயா:

இந்தியர்களை ஒன்றுபடுத்த அதிகமான அரசியல் கட்சிகள் தேவையில்லை. கல்வி மட்டும் போதுமானது.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா இதனை கூறினார்.

மலேசிய இந்தியர்களின் ஒற்றுமை குறித்து பலர் பேசி வருகின்றனர்.

குறிப்பாக பல அரசியல் கட்சிகளை தொடங்கி அதில் சேருங்கள். இந்திய சமுதாயம் ஒற்றுமையாக இருக்கும் என கூறுகின்றனர்.

என்னை பொறுத்தவரையில் இந்தியர்களை ஒன்றுப்படுத்த அதிகமான அரசியல் கட்சிகள் தேவையில்லை. கல்வி மட்டும் போதும்.

இதை தான் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வலியுறுத்துகிறது.

கல்வியின் வாயிலாக இந்திய சமுதாயத்தை ஒன்றிணைக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.

அதன் அடிப்படையில் இந்த கல்வியை கொண்டு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நாட்டில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

பெட்டாலிங்ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யுத்தம் நிகழ்வை தொடக்கி வைத்து பேசிய சுரேன் கந்தா கூறினார்.

கடந்த காலங்களை போன்று அரசாங்கத் துறையில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

குறிப்பாக இந்த எண்ணிக்கையை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் மேற்கொண்டோம்.

ஆனால் அரசுத் துறைகளில் பணியாற்ற இந்தியர்கள் அதிகம் விண்ணப்பிப்பது இல்லை என கூறுகிறார்கள்.

ஆக அரசுத் துறையில் இந்தியர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் சிறப்பு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று சுரேன் கந்தா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset