செய்திகள் மலேசியா
மலேசியாவின் எதிர்காலத் தலைமுறைகளை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு பேரரசர் தம்பதியினரின் வாழ்த்துச் செய்தி
கோலாலம்பூர்:
மலேசியாவின் பேரரசர் சுல்தான் இப்ராஹிம், பேரரசி ராஜா ஸரித் சோஃபியா ஆகியோர், நாட்டின் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்புகளையும் தியாகங்களையும் பாராட்டும் விதமாக, இன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வியாளர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பேரரசர் தம்பதியினர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், நாட்டின் எதிர்காலத்திற்காக அறிவும், நன்னடத்தையும், போட்டித்திறனும் கொண்ட தலைமுறைகளை உருவாக்குவதில் முக்கியத் தூணாக விளங்கும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
"இளம் தலைமுறையினருக்கு அறிவைப் புகட்டுவதிலும், உன்னதமான விழுமியங்களை ஊட்டுவதிலும் ஆசிரியர்களின் தியாகங்கள், பொறுமை, அர்ப்பணிப்புக்கு சுல்தான் இப்ராஹிம் பேரரசி ராஜா ஸரித் சோஃபியா ஆகியோர் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் தொழில் தொடர்ந்து மதிக்கப்படுவதையும், சிறந்த மலேசியர்களை உருவாக்கும் திறனையும் கொண்டிருப்பதை உறுதிசெய்ய, கல்வியாளர்களின் நலன் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும் அவர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 2:42 pm
எஸ்பிஎம் தேர்வு இன்னும் கட்டாயம்; மலாய், வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்: ஜம்ரி
May 15, 2026, 2:40 pm
விசா விலக்கு; மோசடிக்காரர்களை மலேசியாவிற்கு ஈர்க்கும் காரணங்களில் ஒன்றாகும்: ஐஜிபி
May 15, 2026, 2:38 pm
அதிகாரத்திற்காகப் போராட இது நேரமல்ல - பிரதமர்
May 15, 2026, 1:16 pm
