நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிக்கோட்டினை மீண்டும் விஷச் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பினாங்கு:

விஷங்கள் சட்டத்தில் நிக்கோட்டினை மீண்டும் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

புகையிலை மசோதாவில் ஜியிஜியிலிருந்து நீக்கப்பட்டதை மீட்டெடுத்து, விஷங்கள் சட்டத்தில் நிக்கோட்டினை மீண்டும் சேர்க்குமாறு பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக அச் சங்கத்தின் கல்வி, ஆய்வுப்பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

1952 ஆம் ஆண்டு விஷங்கள் சட்டத்தின் கீழ், திரவ, ஜெல் நிக்கோட்டினை விஷப் பட்டியலிலிருந்து 2023-ல் அரசாங்கம் நீக்கியதை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முழுமையாக வரவேற்பதாக சுப்பாராவ் தெரிவித்தார்.

இது பொது சுகாதாரத்திற்கும், மலேசியாவின் குழந்தைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

சுகாதார அமைச்சின் நிலைப்பாடு என்ன என்பதை அனைவரும்  அறிய விரும்புகின்றனர்.

நிக்கோட்டினைப் பட்டியலிலிருந்து நீக்கியது மிகவும் வெட்கக்கேடானது.

இது சிறு குழந்தைகள், இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கு எதிரானது.

அப்போதைய சுகாதார அமைச்சர் அந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

அமைச்சர், நச்சுப் பொருள் வாரியத்தின் அறிவுரைக்கு எதிராகச் செயல்பட்டார் என நீதிமன்றம் கூறியுள்ளது.

அந்த முடிவு பகுத்தறிவற்றது என்றும், நச்சுப் பொருள் வாரியத்துடன் முறையான கலந்தாலோசனை இல்லாமல் எடுக்கப்பட்டது என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.

சுகாதார அமைச்சு இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset