நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய, சீனா திவேட் பயிற்சி திட்டத்தில் பங்கேற்கும் இந்திய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை மித்ரா பெருமையாக கொள்கிறது: ரவீந்திரன் நாயர்

சிப்பாங்:

மலேசிய, சீனா திவேட் பயிற்சி திட்டத்தில் பங்கேற்கும் இந்திய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை மித்ரா பெருமையாக கொள்கிறது.

மித்ராவின் தலைமை இயக்குநர்  ரவீந்திரன் நாயர் இதனை கூறினார்.

நமது இளைஞர்களை சீனாவுக்கு அனுப்பி அவர்களுக்கு திவேட் பயிற்சிகளை வழங்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது

இதில் ஒவ்வொரு ஆண்டும் 500 இந்திய இளைஞர்களை பயிற்சிக்காக சீனாவுக்கு அனுப்புவதற்கான முயற்சியை மித்ரா மேற்கொண்டு வருகிறது.

இந்த மலேசியா, சீனா திவேட் திட்டத்திற்காக மித்ரா 2.9 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

அவ்வகையில் இன்று மாலை 35 இந்திய மாணவர்கள் சீனாவுக்கு புறப்படுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு, மெக்கானிக்கல் பயிற்சிக்காக இம்மாணவர்கள் சீனாவுக்கு செல்கின்றனர்.

அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு இம்மாணவர்கள் சீனாவில் தங்கி உரிய பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு, தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சீனா அபரீத வளர்ச்சியை கண்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு தான் அரசாங்கம் நமது மாணவர்களை சீனாவுக்கு அனுப்புகிறது.

ஆக மாணவர்கள் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இதுவே மித்ராவின்  முதன்மை இலக்காக உள்ளது.

அதே வேளையில் இத்திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி மாணவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் மனிதவள அமைச்சரும் மித்ரா தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு எனது நன்றி என ரவீந்திரன் நாயர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset