செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக அமைச்சரவையில் சேர காங்கிரசுக்கு விஜய் அழைப்பு: கிரிஷ் சோடங்கர் தகவல்
சென்னை:
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் இடம் பெற அழைப்பு வந்துள்ளது என தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தோம்.
அப்போது அவர், எம்எல்ஏக்கள் அனைவரும் மக்களுக்காக கடினமாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை புதிதாக கட்டமைக்க இதுவே சரியான நேரம். கட்சியை பலப்படுத்த கடுமையாக பாடுபட வேண்டும்.
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கட்சியை வலுப்படுத்த எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.
மேலும், தமிழக அமைச்சரவையில் இடம் பெற எங்களுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது. இதன்மூலம் மக்களுக்குத் தேவையான நற்பணிகளை முன்னெடுப்போம். எத்தனை அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்து தற்போது ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
