நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதுபோதையில் எதிர் திசையில் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம்

ஷாஆலம்:

குடிபோதையில் எதிர் திசையில் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் கிள்ளானில் உள்ள பெர்சியாரன் கோத்தாவில் நடந்தது என்று தென் கிள்ளான் மாவட்ட  போலிஸ் தலைவர் லிம் ஜிட் ஹுவே கூறினார்.

நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் 20 வயதுள்ள அந்த இளைஞர், தூக்கி வீசப்பட்டு அவரது உடல், வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

போர்ட் கிள்ளானில் இருந்து ஷா ஆலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த, 30 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரால் ஓட்டப்பட்ட பெரோடுவா பெஸ்ஸா கார், பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மேலும் அவர் சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு அஜாக்கிரதையாகவும், சாலைப் போக்குவரத்திற்கு எதிராகவும் ஓட்டப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரின் ஓட்டுநருக்கு மது அருந்தியிருந்தது ஆரம்பகட்ட பரிசோதனை முடிவுகளில் உறுதி செய்யப்பட்டது.

சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைக்காக உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

மேலும், விசாரணைக்கு உதவுவதற்காக, கிள்ளான் மாஜிஸ்திரேட் அசிலா மாட்டிடம் இருந்து மே 15 வரை நீதிமன்றக் காவல் மனு பெறப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset