செய்திகள் மலேசியா
டிரம்ப்பிடம் ஜோ லோ கருணை மனு தாக்கல் செய்ததாகக் கூறப்படுவது குறித்து அடுத்த வாரம் அரசு விவாதிக்கும்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
தலைமறைவான தொழிலதிபர் ஜோ லோ அமெரிக்க அதிகாரிகளிடம் கருணை மனு தாக்கல் செய்ததாகக் கூறப்படுவது குறித்த அறிக்கை பற்றி அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டதால், அது அதிகாரப்பூர்வமாக விவாதிக்கப்படவில்லை.
ஆனால் இது அடுத்த வாரம் நிச்சயமாக அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும்.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் ஜோ லோ கருணை மனு தாக்கல் செய்ததாகக் கூறப்படும் அறிக்கை குறித்தும், இந்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகளிடம் அரசு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்புத் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளதா என்பது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் ஃபஹ்மி இவ்வாறு கூறினார்.
இந்த மனு தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து மலேசிய அரசுக்கு ஏதேனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததா என்று கேட்டதற்கு, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
இந்த விஷயத்தை உள்துறை அமைச்சரிடமோ அல்லது வெளியுறவு அமைச்சரிடமோ ஊடகங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2026, 5:30 pm
போலி மை கார்ட் பயன்படுத்திய வெளிநாட்டவர் கைது
May 14, 2026, 5:00 pm
மலேசிய பூப்பந்தின் பொற்கால நாயகன் தே கியூ சான் காலமானார்
May 14, 2026, 3:48 pm
T20 ரோன்95 மானியம் நீக்கப்படவில்லை: அந்தோணி லோக்
May 14, 2026, 3:43 pm
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
May 14, 2026, 3:42 pm
குவா மூசாங்கில் யானை தாக்கியதில் ஆடவர் உயிரிழந்தார்
May 14, 2026, 2:32 pm
தென்மேற்கு பருவமழை தொடக்கம்: மலேசியர்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை
May 14, 2026, 12:46 pm
