நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தென்மேற்கு பருவமழை தொடக்கம்: மலேசியர்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை

 கோலாலம்பூர்: 

நாடு இன்று முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவக்காற்றுக் கட்டத்திற்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதால், தற்போதைய வானிலை முன்னேற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, இந்தக் காலம் பொதுவாக பெரும்பாலான பகுதிகளில் குறைந்த மழையையும், வெப்பமான, வறண்ட வானிலை நிலைமைகளையும் கொண்டுவரும் என்று தெரிவித்தார்.

"தற்போதைய வானிலை முன்னேற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், தண்ணீரை நியாயமாகப் பயன்படுத்தவும், புகைமூட்டம், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு வழிவகுக்கும் திறந்த வெளி எரிப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் வேண்டும்" என்று அவர் நேற்று பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.

தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவருமான அஹ்மத் ஜாஹித், இந்தக் காலகட்டத்தில் கனமழை, வலுவான காற்று, இடியுடன் கூடிய மழை சில பகுதிகளில் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரை, வடக்கு சரவாக், மேற்கு சபா ஆகிய பகுதிகளில், குறிப்பாக அதிகாலையில், 'ஸ்கால் லைன்' (squall line) நிகழ்வு ஏற்படக்கூடும் என்றும், அது பல மணி நேரம் நீடிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், மலேசிய வானிலை ஆய்வுத் துறையால் (மெட்மலேசியா) வெளியிடப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட, சமீபத்திய வானிலைத் தகவல்களைக் குறிப்பிடவும் அவர் வலியுறுத்தினார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset