செய்திகள் மலேசியா
குவா மூசாங்கில் யானை தாக்கியதில் ஆடவர் உயிரிழந்தார்
குவா மூசாங்:
குவா முசாங்கில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு அருகே ஆற்றங்கரையில் காட்டு யானை தாக்கியதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
காலை 11.38 மணிக்கு, பாதிக்கப்பட்டவரான 55 வயது ரசாலி தாவூத் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது என்று குவா முசாங் போலிஸ் தலைவர் சிக் சூன் ஃபூ கூறினார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கால்தடங்களும் யானையின் சாணமும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குவா முசாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் காட்டு யானைக் கூட்டத்தால் தாக்கப்பட்டதாக நம்பப்படுவதாகவும், சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் எந்தக் குற்றச் செயல்களும் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2026, 5:30 pm
போலி மை கார்ட் பயன்படுத்திய வெளிநாட்டவர் கைது
May 14, 2026, 5:00 pm
மலேசிய பூப்பந்தின் பொற்கால நாயகன் தே கியூ சான் காலமானார்
May 14, 2026, 3:48 pm
T20 ரோன்95 மானியம் நீக்கப்படவில்லை: அந்தோணி லோக்
May 14, 2026, 3:43 pm
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
May 14, 2026, 2:32 pm
தென்மேற்கு பருவமழை தொடக்கம்: மலேசியர்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை
May 14, 2026, 12:46 pm
