நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காதல் கொலையாக மாறிய பயங்கரம்: கர்ப்பிணி பெண்ணைக் கொன்று தீவைத்த இளைஞர்

புத்ராஜெயா: 

புத்ராஜெயாவை உலுக்கிய கொடூரக் கொலை வழக்கில், தனது கர்ப்பிணி காதலியைக் குத்திக்கொன்று பின்னர் அவரது உடலை தீயிட்டு எரித்த முன்னாள் கல்லூரி மாணவருக்கு, மேல்முறையீட்டு நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்துள்ளது.

23 வயதான ஃபக்ருல் ஐமான் சஜாலி, 21 வயதான நூர் அனிசா அப்துல் வஹாப்பை திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.

சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட பெண் 18 வார கர்ப்பிணியாக இருந்தது, இந்த வழக்கை மேலும் அதிர்ச்சிகரமாக மாற்றியுள்ளது.

நீதிபதி அஸ்மான் அப்துல்லாஹ் தலைமையிலான மூவர் அமர்வு, முன்பு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, அதற்குப் பதிலாக 40 ஆண்டு சிறைத்தண்டனையை வழங்கியது.

குற்றம் நடந்தபோது குற்றவாளி இளம் வயதில் இருந்தது, சட்டத்தில் உள்ள மாற்று தண்டனை வாய்ப்புகள் கருத்தில் கொள்ளப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால், நீதிமன்றம் இந்தச் சம்பவத்தை “திடீர் கோபத்தின் விளைவு அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான குற்றம்” என கடுமையாக விவரித்தது.

வழக்கின் தகவல்படி, குற்றவாளி முதலில் பெண்ணின் தலையில் குச்சியால் தாக்கியுள்ளார். பின்னர் அவரை வடிகாலுக்கு இழுத்துச் சென்று வயிற்றில் கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்துள்ளார். அதன் பிறகு உடலை தீ வைத்து எரித்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுங்கை புலோ மருத்துவமனையின் தடயவியல் அறிக்கையில், பாதிக்கப்பட்டவரின் உடலின் பெரும்பகுதி தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும், இந்தக் கொலையில் ஒரு பெண்ணின் உயிர் மட்டுமல்ல, கருவில் வளர்ந்துகொண்டிருந்த 18 வார சிசுவின் உயிரும் பறிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்த வழக்கு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், இளைய தலைமுறையின் உணர்ச்சி கட்டுப்பாடு,குடும்ப உறவுகளில் உருவாகும் ஆபத்தான மனநிலைகள் குறித்து மீண்டும் தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset