செய்திகள் மலேசியா
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா; சமுதாயத்திற்காக உழைக்கும், குரல் கொடுக்கும் ஒரே கட்சி மஇகா தான் என மக்கள் உணர்ந்துள்ளனர்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா மக்களை சென்றடையவில்லை என்றால் மிகப் பெரிய நஷ்டம் நமக்கு தான்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
மஇகா தொடங்கப்பட்டு தற்போது 80 ஆண்டுகள் நிறைவை அமைந்துள்ளது. இந்த 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை மஇகா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடவுள்ளது.
குறிப்பாக 9 திட்டங்களின் வாயிலாக இந்த 80ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது.
முதலாவதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்தான் இந்த மஇகா கட்சி தொடங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வரும் மே 21ஆம் தேதி அவ்வாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறவுள்ளது.
இதே போன்று நாடு முழுவதும் நடத்தப்படும் பிரார்த்தனைகள் நடத்தப்படும்.
மஇகாவில் கிறிஸ்துவர்களும் முஸ்லிம் அன்பர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் அவர்களின் வழியிலும் பிரார்த்தனைகளும் நடத்தப்படும்.
மஇகா உறுப்பினர்களின் குடும்ப தின விழா நாடு முழுவதும் நடத்தப்படும்.
மேலும் மருத்துவ முகாம், ரத்த தானம், புற்றுநோய் பரிசோதனைகளும் நடத்தப்படும்.
கால்பந்து, கபடி, பூப்பந்து என விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும். கலை, கலாச்சார, பாரம்பரிய நிகழ்வுகளும் நடத்தப்படும்.
பேச்சு போட்டியுடன் மக்களுடனான சிறப்பு சந்திப்பு கூட்டம் நடத்தப்படும். உச்சக்கட்டமாக மாபெரும் ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்படும்.
மஇகா 80 ஆண்டுகாலமாக இந்த நாட்டிலேயே இந்தியர்களுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மஇகாவின் சாதனைகள், போராட்டங்கள் ஆகியவற்றை மக்களிடையே கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இது அமையும்.
குறிப்பாக நடிகராக இருந்த விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு சமூக ஊடகங்கள் முக முக்கிய காரணமாக அமைந்தது.
அவ்வகையில் மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா மக்களை சென்றடைய அனைத்து பணிகளையும் மாநில, தொகுதி தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அப்படி இல்லையென்றால் நஷ்டம் தான் நமக்கு தான் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2026, 6:11 pm
புனித பூமியில் மேலும் இரண்டு மலேசிய ஹஜ் பயணிகள் உயிரிழந்தனர்
May 14, 2026, 5:30 pm
போலி மை கார்ட் பயன்படுத்திய வெளிநாட்டவர் கைது
May 14, 2026, 5:00 pm
மலேசிய பூப்பந்தின் பொற்கால நாயகன் தே கியூ சான் காலமானார்
May 14, 2026, 3:48 pm
T20 ரோன்95 மானியம் நீக்கப்படவில்லை: அந்தோணி லோக்
May 14, 2026, 3:43 pm
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
May 14, 2026, 3:42 pm
குவா மூசாங்கில் யானை தாக்கியதில் ஆடவர் உயிரிழந்தார்
May 14, 2026, 2:32 pm
தென்மேற்கு பருவமழை தொடக்கம்: மலேசியர்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை
May 14, 2026, 12:46 pm
