செய்திகள் மலேசியா
விலைகளை விட உலகளாவிய நெருக்கடி விநியோகச் சங்கிலியை அதிகம் பாதிக்கிறது: அமீர் அலி மைடின்
கோலாலம்பூர்:
விலை உயர்வுகளை விட உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்களே தயாரிப்பு விநியோகச் சங்கிலிகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன.
மைடின் நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா டாக்டர் அமீர் அலி மைடின் கூறினார்.
புவிசார் அரசியல் சவால்களின் தாக்கம் மலேசியப் பொருளாதாரத்தில் இன்னும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இருந்தாலும் எதிர்காலத்தில் நாடு குறிப்பிடத்தக்க விநியோகச் சங்கிலி சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையான சவால் விலை அல்ல. என்னைப் பொறுத்தவரை, மக்கள் அதிகமாகச் சிந்தித்து விலையில் கவனம் செலுத்துகிறார்கள்.
விலையை மறந்துவிடுங்கள், அதைவிட முக்கியமானது, நம்மிடம் விநியோகம் உள்ளதா என்பது தான் என்று அவர் பெர்னாமாவுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்தார்.
தற்போதைய விலைப்போக்கு குறித்துக் கருத்து தெரிவித்த அமீர் அலி, உலகளாவிய விலை அழுத்தங்களும் புவிசார் அரசியல் நிகழ்வுகளும் முக்கியமானவை, உள்நாட்டு விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், மலேசியாவின் மீதான தாக்கம் தற்போது கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றார்.
சில பொருட்களின் விலை குறைந்திருப்பதையும், அதற்கு நேர்மாறாக சுமார் மூன்று முதல் ஐந்து சதவிகிதம் வரை விலை அதிகரித்திருப்பதையும் நீங்கள் காணலாம்.
இருப்பினும், என்னைப் பொறுத்தவரை, இந்தப் புவிசார் அரசியல் சவால்களின் தாக்கம் மலேசியப் பொருளாதாரத்தில் இன்னும் முழுமையானதாகவோ அல்லது பரவலானதாகவோ இல்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2026, 5:30 pm
போலி மை கார்ட் பயன்படுத்திய வெளிநாட்டவர் கைது
May 14, 2026, 5:00 pm
மலேசிய பூப்பந்தின் பொற்கால நாயகன் தே கியூ சான் காலமானார்
May 14, 2026, 3:48 pm
T20 ரோன்95 மானியம் நீக்கப்படவில்லை: அந்தோணி லோக்
May 14, 2026, 3:43 pm
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
May 14, 2026, 3:42 pm
குவா மூசாங்கில் யானை தாக்கியதில் ஆடவர் உயிரிழந்தார்
May 14, 2026, 2:32 pm
தென்மேற்கு பருவமழை தொடக்கம்: மலேசியர்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை
May 14, 2026, 12:46 pm
