செய்திகள் மலேசியா
ஜோ லோ மீதான விசாரணையை போலிஸ் நிறுத்தாது: ஐஜிபி
கோலாலம்பூர்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் அவர் கருணை கோருவதாக செய்திகள் வெளியான போதிலும் தலைமறைவான தொழிலதிபர் ஜோ லோ மீதான விசாரணை இன்னும் தொடர்கிறது.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமது காலித் இஸ்மாயில் இதனை கூறினார்.
இந்த விவகாரம் இன்னும் போலிசாரின் கவனத்திலும் நடவடிக்கையிலும் உள்ளது. குறிப்பாக இன்னும் விசாரணை நிலையில் உள்ளது.
இந்த விஷயத்தை விவாதிப்பதற்கு மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக நான் கருதுகிறேன் என்று அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறினார்.
விசாரணையைத் தொடரும் முயற்சியில், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் போலிசார் நல்லுறவை ஏற்படுத்தி வருகிறது.
நாங்கள் முன்பைப் போலவே எங்கள் நடவடிக்கைகளைத் தொடர்வதோடு, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் நல்லுறவையும் பேணி வருகிறோம் என்று அவர் கூறினா.
முன்னதாக ஜோ லோ, டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக இன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
