செய்திகள் மலேசியா
நாளை ஷா ஆலம் இலகு ரயில் போக்குவரத்து 3 (LRT3) வழித்தடத்தை பிரதமர் அன்வார் தொடங்கி வைக்கிறார்
ஷா ஆலம்:
பண்டார் உத்தாமாவிலிருந்து ஜோஹான் செத்தியா வரை 37.8 கிலோமீட்டர் நீளமுள்ள இலகு ரயில் போக்குவரத்து 3 (LRT3) ஷா ஆலம் வழித்தடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது பயணிகள் சேவைக்குத் தயாராக உள்ளது என்று இந்த வழித்தடத்தின் தலைவர்முஹம்மது அரிஃபின் இத்ரிஸ் கூறினார்.
இந்த பகுதிகளில் வசிக்கும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இதன்முலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி வைப்பார் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
20 நிலையங்களைக் கொண்ட இந்த வழித்தடத்தின் வணிக ரீதியான தொடக்கத் தேதி, நேரத்தை பிரதமர் அந்த நிகழ்வின்போது அறிவிப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.
"புதிய நிலையங்கள் பந்தர் உத்தாமா, கயு அரா, BU 11 (பண்டார் உத்தாமா 11), டாமன்சாரா இடமான், சுபாங், க்ளென்மேரி 2, கெர்ஜாயா, ஸ்டேடியம் ஷா ஆலம், டத்தோ மென்டேரி, UiTM ஷா ஆலம் ஆகும்.
"மீதமுள்ள 10 நிலையங்கள் Seksyen 7 Shah Alam, Bandar Baru Klang, Pasar Klang, Jalan Meru, Jambtan Kota, Taman Selatan, Seri Andalas, Klang Jaya, Bandar Bukit Tinggi, and Johan Setia ஆகியவை ஆகும்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பண்டார் உத்தாமாவில் உள்ள காஜாங் லைன் மற்றும் க்ளென்மேரி 2 இல் உள்ள கிளானா ஜெயா லைன் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பயணத்தை இன்னும் எளிதாக்க, 13 வழித்தடங்களில் இயங்கும் 40 ஃபீடர் பேருந்துகளால் நெட்வொர்க் ஆதரிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை, 323 நிறுத்தங்களில், ஒவ்வொரு பயணத்திற்கும் வெறும் RM1 மட்டுமே கட்டணம் என்று அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 3:58 pm
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்: தேர்தல் ஆணையம்
June 27, 2026, 2:00 pm
சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது: அமைச்சகம் எச்சரிக்கை
June 27, 2026, 12:12 pm
கெமெலே சட்டமன்றத் தொகுதி: மும்முனை போட்டியில் ரவீன்குமார்
June 27, 2026, 10:00 am
