செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்: தேர்தல் ஆணையம்
ஜொகூர்பாரு:
அனைத்து 56 வேட்புமனு மையங்களில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலில் 172 வேட்பாளர்கள் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளனர்.
அனைத்து 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகிய கட்சிகள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருன் உறுதிப்படுத்தினார்.
தேசியக் கூட்டணி 33 வேட்பாளர்களையும், அதனைத் தொடர்ந்து பெர்சமா மலேசியா (15), மூடா (நான்கு), பிஎஸ்எம், ஓராங் அஸ்லி மலேசியா ஆகிய கட்சிகள் தலா ஒரு வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஜோகூர் பி.ஆர்.என் தேர்தலில் மொத்தம் ஆறு சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களின் முழுப் பட்டியலில் 34 பெண்களும் 138 ஆண்களும் அடங்குவர்.
இதில் 27 மும்முனைப் போட்டிகளும், 12 நான்கு முனைப் போட்டிகளும், 14 நேருக்கு நேர் போட்டிகளும் நடைபெறுகின்றன.
மூன்று மாநிலத் தொகுதிகளில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. மூத்த வேட்பாளருக்கு 73 வயது, இளைய வேட்பாளருக்கு 23 வயது.
மொத்தம் 27.3 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் ஜூலை 7 ஆகவும், வாக்குப்பதிவு நாள் ஜூலை 11 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 2:10 pm
நாளை ஷா ஆலம் இலகு ரயில் போக்குவரத்து 3 (LRT3) வழித்தடத்தை பிரதமர் அன்வார் தொடங்கி வைக்கிறார்
June 27, 2026, 2:00 pm
சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது: அமைச்சகம் எச்சரிக்கை
June 27, 2026, 12:12 pm
கெமெலே சட்டமன்றத் தொகுதி: மும்முனை போட்டியில் ரவீன்குமார்
June 27, 2026, 10:00 am
