நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய, யதார்த்தமான தேர்தல் அறிக்கையை நம்பிக்கை கூட்டணி வெளியிடும்: சைபுடின்

ஜொகூர்பாரு:

யதார்த்தமான, நடைமுறைக்கு உகந்த மற்றும் மக்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய சலுகைகளை முன்னிலைப்படுத்தி, ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை நம்பிக்கை கூட்டணி விரைவில் வெளியிடும்.

நம்பிக்கை கூட்டணி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இதனை கூறினார்.


கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்களுடனான சந்திப்பின் மூலம் இந்தத் தேர்தல் அறிக்கை வரும் திங்கட்கிழமை இறுதி செய்யப்படும்.

பொருளாதார நிலைத்தன்மை, மக்கள் நலன், நல்லாட்சி, அரசு வருவாயை அதிகரித்தல், மக்களுக்கு நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல் போன்ற முக்கிய அம்சங்களை நம்பிக்கை கூட்டணி தேர்தல் அறிக்கை வலியுறுத்தும்.

மாநிலம் அதிக நன்மைகளையும் வளர்ச்சியையும் பெறுவதற்கு ஏதுவாக, மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் ஒரு கூட்டணியால் ஜொகூர் ஆளப்பட வேண்டும் என்பதே தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

இந்தத் தேர்தல் அறிக்கை யதார்த்தமானது, மக்கள் இதை எளிதில் புரிந்துகொண்டு தங்களோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என்று கூலாயில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset