நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி, பாஸ், வவாசான் ஆகியவற்றுக்கு இடையே கீழ் மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம்: அஹ்மத் ஜாஹித்

ஜொகூர்பாரு:

தேசிய முன்னணி, பாஸ், வவாசான் ஆகியவற்றுக்கு இடையே கீழ் மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம்.

தேசிய முன்னணி, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாஸ், வவாசான் நெகாரா கட்சிகளுடன் போட்டியிட்ட தொகுதிகள் தொடர்பாக தேசியக் கூட்டணி ஒத்துழைக்கும் திட்டம் இருப்பதற்கான சாத்தியக்கூற்றை நான் நிராகரிக்கவில்லை.

இருப்பினும், இந்த விவாதங்கள் கட்சியின் கீழ் மட்டங்களில் நடைபெற்றிருக்கலாம்.

மேலும், இது மூன்றாவது அல்லது நான்காவது அடுக்கு மட்டத்தில் செய்யப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தையும் அவர் ஏற்படுத்தினார்.

ஆக பாஸ், வவாசான் நெகாரா கட்சிகளுடன் போட்டியிட்ட தொகுதிகள் தொடர்பாக தேசிய முன்னணி ஒத்துழைக்கத் திட்டமிட்டுள்ளது என்ற கூற்றைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.

இது கீழ் மட்டத்தில் நடைபெறும் ஒரு கலந்துரையாடலாக இருக்கலாம்.

பெனூட் சட்டமன்ற நிர்வாகிகளுடன் மதிய உணவு அருந்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
 

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset