செய்திகள் மலேசியா
கெமெலே சட்டமன்றத் தொகுதி: மும்முனை போட்டியில் ரவீன்குமார்
சிகாமட்:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் கெமெலே சட்டமன்றத் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது ஜொகூர் பொதுத் தேர்தலில் அங்கு நான்கு முனைப் போட்டி நிலவியது.
ஆனால்.இன்று இங்குள்ள ஜாலான் கெனுவாங் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் நாளில், அத்தொகுதியில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி, தேசியக் கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நடைபெறவுள்ளது.
இதில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த முதல் வேட்பாளர் தேசிய முன்னணி வேட்பாளர் கே. ரவீன் குமார் ஆவார்.
அவரைத் தொடர்ந்து நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் முகமது அபிப் அப்துல் ஹமீத், இறுதியாக தேசியக் கூட்டணி வேட்பாளர் உசைர் இஸ்மாயில் ஆகியோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
கெமெலே தொகுதியின் தேர்தல் பிரிவு இயக்குநர் இசுதீன் சனுசி,
சிகாமட்டில் உள்ள ஜாலான் கெனுவாங் பல்நோக்கு மண்டபத்தில், வேட்புமனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான நேரம் சற்று முன்பு காலை சுமார் 10 மணியளவில் முடிவடைந்ததாக அறிவித்தார்.
தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த எந்த வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்படவில்லை.
கெமெலே தொகுதியில் நிலவும் மும்முனைப் போட்டியில், இந்த முறை 16ஆவது ஜோகூர் பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 2:10 pm
நாளை ஷா ஆலம் இலகு ரயில் போக்குவரத்து 3 (LRT3) வழித்தடத்தை பிரதமர் அன்வார் தொடங்கி வைக்கிறார்
June 27, 2026, 2:00 pm
சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது: அமைச்சகம் எச்சரிக்கை
June 27, 2026, 10:00 am
ஜொகூர் மாநிலத் தேர்தல்: புத்ரி வாங்சாவில் மஸ்லியுடன் அமிரூடின், சைபுடின் வந்தனர்
June 27, 2026, 9:50 am
