நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவை குறை கூறுபவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை; மஇகாவின் சமுதாய சேவைகள் தொடரும்: டான்ஸ்ரீ ராமசாமி

சுங்கைசிப்புட்:

நாட்டில் உள்ள இந்தியர்களின் நலனுக்காக மஇகா தொடர்ந்து சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

மஇகாவின் தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எம். ராமசாமி இதனை கூறினார்.

இந்தியர்களின் நலனுக்காக பல் வேறு சேவைகள் மேற்கொண்டு வந்தாலும் மஇகாவை குறை கூறும் சிலர் இருக்கத்தான் உள்ளனர்.

அவர்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

எனினும் மஇகா சமுகத்திற்கு தொடர்ந்து சேவை தொடரும் என்று மாநில மஇகா தலைவருமான டான்ஸ்ரீ ராமசாமி தெரிவித்தார்.

நேற்று சுங்கை சிப்புட்டில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு நோய் வாய்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மஇகா தலைவர்கள் தற்போது அரசாங்க பதவிகளில் இல்லை என்றாலும்  இந்திய சமுகத்திற்கு சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

மஇகாவை மேலும் சிறந்த நிலைக்கு கொண்டுச் செல்ல கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறார்.

அவருக்கு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தொடரும் என்று அவர் உறுதியளித்தார்.

சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் கல்வி என்பதால், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மஇகா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.

மேலும், திறமையான மாணவர்களுக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மூலம் உயர்கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தொழிற்கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக டேப் கல்லூரி, தற்போது திவேட் கல்வி மையமாக செயல்பட்டு, தொழில்திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய நிகழ்வில் 20 மடிக்கணினிகள் மட்டுமின்றி, மாணவர்களுக்கு கல்வி உதவிகளும் வழங்கப்பட்டதுடன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset