செய்திகள் மலேசியா
சுங்கை சிப்புட்டில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்திற்கு நிலப்பட்டா: டத்தோ சிவநேசன்
ஈப்போ:
சுங்கை சிப்புட் ஜாலான் லிந்தாங்கில் எழுந்தருளியுள்ள தர்ம முனீஸ்வரர் ஆலயத்திற்கு நிலப்பட்டா அங்கீகாரத்தை மாநில அரசு வழங்கியுள்ளது.
மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை கூறினார்.
வன பாதுகாப்பு இலாகாவிற்கு சொந்தமான நிலத்தில் அந்த ஆலயம் இருந்து வந்தது.
பொது பணித் துறையில் வேலை செய்து வந்த தொழிலாளர்களால் அந்த எழுப்பப்பட்டது.
அந்த ஆலயத்திற்கு நிரந்த நிலத்தை பெற தற்பொழுதுள்ள நிலத்தை பெற மேற்கொண்டனர்
அவர்கள் தம்முடைய கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து நேற்று மாநில ஆட்சிக் குழுக கூட்டத்தில் இந்த விவகாரத்தை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சராணி முகமட் ஒப்புதலை பெற்றுள்ளதாக அவரது அலவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
பேரா மாநிலத்தில் உள்ள அரசாங்க நிலத்தில் உள்ள ஆலயங்களை தம்முடைய அனுமதியின்றி உடைப்படாது.
இதே வேளையில் ஆலய நிர்வாகமும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துப் போகவேண்டும்.
இதற்கு முரன்பிடித்தால் எழும்பிரச்சனைக்கு தாம் பொறுப்பேற்க மாட்டேன்.
இதற்கு முன்பு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இரயில்வே நிலத்தில் இருந்து வந்த ஆலய நிலப்பிரச்சனைக்கு தீர்வுக்காணப்படுள்ளது.
தாமான் துன் சம்பதனின் உள்ள்முனீஸ்வர் ஆலயத்திற்கு தீர்வுக் காணப்படுள்ளதையும் நினைவுக் கூர்ந்தார்
மாநில அரசாங்க செயலகத்தில. உள்ள சிவநேசன் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜாலோங் சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக் குழு உறுப்பினருமான லோ சி இ, ஆலயத் தலைவர் க. ராஜனும் உடன் இருந்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 6:05 pm
ஷாஆலமில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்த நபர்களை போலிஸ் தேடி வருகிறது
August 26, 2026, 3:39 pm
ஆஸ்திரேலிய சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: மியன்மார் நாட்டு ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
August 26, 2026, 3:34 pm
ஜாலுர் கெமிலாங் கொடி அனைத்து மலேசிய மக்களின் சொத்தாகும்: சிலாங்கூர் சுல்தான் பெருமிதம்
August 26, 2026, 3:32 pm
