செய்திகள் தமிழ் தொடர்புகள்
கடும் எதிர்ப்பு எழுந்ததின் எதிரொலி: முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவி ரத்து
சென்னை:
விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “ ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் சிறப்புப் பணி அரசியல் அதிகாரியாக நியமிப்பது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இதன்மூலம் ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதுகுறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழக முதல்வரின் அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுகிறார்.
அவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும். இதற்கான பணி விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்துத் தனியாக அறிக்கை வெளியிடப்படும்’ என குறிப்பிடப்பட்டது.
முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும், இன்று சட்டப்பேரவையில் பேசிய தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா, ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனத்துக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், தவெக அரசு அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
August 17, 2026, 6:34 pm
