நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டுக்கடன் பரிந்துரைகளுக்காகக் கையூட்டு: முன்னாள் வங்கி உயர் அதிகாரிக்கு அபராதம்

மலாக்கா: 

வீட்டுக் கடன் பரிந்துரைகள் தொடர்பாக ஊழல் பணம் செலுத்தியதைப் புகாரளிக்கத் தவறியது தொடர்பான 17 குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு வங்கியின் முன்னாள் ஊழியருக்கு இன்று ஐயர் கெரோ செக்க்ஷன் நீதிமன்றம் மொத்தம் 90,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.

44 வயதுடைய முஹம்மத் ராயிஸ் முஹம்மத் ரம்லி மீது நீதிபதி எலிசபெத் பாயா வான் இந்தத் தண்டனையை விதித்தார். அபராதம் செலுத்தத் தவறினால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு முதல் 10 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டுகளின்படி, அப்போது வங்கியின் பிராந்திய விற்பனைத் தலைவராக இருந்த முஹம்மத் ராயிஸ், ஒரு சட்ட நிறுவனத்திடமிருந்து, தனது மனைவியின் நிறுவனம் மூலம், 123,132.50 ரிங்கிட் தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார்.

2,820 ரிங்கிட் முதல் 15,545 ரிங்கிட் வரையிலான அந்தப் பணம், தனது மேற்பார்வையின் கீழ் இருந்த ஒரு வங்கி நிர்வாக அதிகாரி மூலம், வீட்டுக் கடன் வழக்குகளுக்கான பரிந்துரைகளைப் பெற அந்தச் சட்ட நிறுவனத்திற்கு உதவியதற்கான ஊக்கமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 13, 2019 முதல் ஜனவரி 27, 2023 வரையிலான காலப்பகுதியில், சிலாங்கூரின் பாத்து கேவ்ஸ், தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் இந்தக் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் ஏற்றுக்கொண்டதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் பிரிவு 16(a)(A) கீழும், மேலும் அதே சட்டத்தின் பிரிவு 25(1) கீழ் (லஞ்சத்தை எம்ஏசிசி அதிகாரிகள் அல்லது அருகிலுள்ள போலிஸ் நிலையத்தில் புகாரளிக்கத் தவறியதற்காக) அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு முன்னர், தண்டனைக் குறைப்பு கோரும் போது, பாதுகாப்பு வழக்கறிஞர் எஸ்.எஸ். அம்ரித்பால் சிங், தனது வாடிக்கையாளருக்கு நிரந்தர வேலை இல்லை என்றும் அவர் மனைவி, மூன்று குழந்தைகளைப் பராமரிக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார்.

எம்ஏசிசி துணை வழக்குத் தொடரும் அதிகாரி ஷரினா பர்ஹானா நோர் ஸாரி வழக்குத் தொடர்பு தரப்பில் ஆஜரானார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset