செய்திகள் மலேசியா
ரபிசி, நிக் நஸ்மி ஆகியோர் வரும் ஞாயிற்றுக்கிழமை தங்களின் புதிய அரசியல் திசையை அறிவிக்கவுள்ளனர்
கோலாலம்பூர்:
பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ரபிசி ரம்லி, செத்தியாவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி ஆகியோர் இந்த ஞாயிற்றுக்கிழமை தங்களின் புதிய அரசியல் திசையை அறிவிக்கவுள்ளனர்.
தங்களின் அடுத்த அரசியல் நகர்வைத் தீர்மானிப்பதற்கு முன்பு, பல்வேறு கருத்துக்கள், பரிசீலனைகள் காரணகளை ஆராய்வதற்கு கடந்த ஆண்டு முதல் நேரம் எடுத்துக் கொண்டோம் என்று ரபிசி கூறினார்.
இந்த அறிவிப்பு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிஜே பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியில் வெளியிடப்படும்.
இனிமேல் எங்களின் அரசியல் திசையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் கருத்தில் கொள்ள, கடந்த ஓராண்டு காலம் எங்களுக்கு வாய்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, முற்போக்கு அரசியல் போக்கை வளர்க்க விரும்பும், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மலேசியர்களை இந்த நிகழ்விற்காக ஒன்றுகூடுமாறு அழைக்கிறேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 5:42 pm
பேராக்கில் 300 கடத்தல் அரிசி மூட்டைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர்
May 13, 2026, 5:31 pm
பூடி95 குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை: ஃபஹ்மி
May 13, 2026, 5:30 pm
ஜோ லோ மீதான விசாரணையை போலிஸ் நிறுத்தாது: ஐஜிபி
May 13, 2026, 4:34 pm
