செய்திகள் மலேசியா
பேராக்கில் 300 கடத்தல் அரிசி மூட்டைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர்
கோலாலம்பூர்:
இன்று அதிகாலை, பேராக்கின் ஜெரிக்கில் உள்ள சிம்பாங் திகா ஃபெல்டா பாபுலுட் போக்குவரத்து விளக்கு சந்திப்பில், 15,000 கிலோகிராம் எடையுள்ள 300 மூட்டைகள் கடத்தல் அரிசியை ஏற்றிச் சென்ற ஒரு லாரியை போலிஸார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர்.
41 வயதுடைய லாரி ஓட்டுநர், அதிகாலை 6 மணிக்கு நடத்தப்பட்ட ஓப் தரிங் பிராவோ 4 சோதனையில் தடுத்து வைக்கப்பட்டதாக புக்கிட் அமானின் வனவிலங்கு குற்றப் பணியகம்/சிறப்பு உளவுப் பிரிவுத் தளபதி எஸ்ஏசி டத்தோ முஹம்மத் ஜக்கி அஷார் தெரிவித்தார்.
69,000 ரிங்கிட் மதிப்புள்ள அந்த அரிசி, அண்டை நாட்டிலிருந்து சட்டவிரோதப் பாதைகள் வழியாகக் கடத்தப்பட்டதாக நம்பப்படுவதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
"அனைத்து அரிசியின் உரிமை தொடர்பான எந்தச் செல்லுபடியாகும் ஆவணங்களையும் லாரி ஓட்டுநரால் சமர்ப்பிக்க முடியவில்லை என்று விசாரணையில் தெரிய வந்தது.
"அந்த அரிசி மூட்டைகள் உட்பட நிசான் யுடி லாரியை உள்ளடக்கிய மொத்தப் பறிமுதல் 184,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
கைது செய்யப்பட்டவரும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும், 1994 ஆம் ஆண்டின் நெல், அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 20-ன் கீழ் மேலதிக நடவடிக்கைக்காக, பேராக் நெல், அரிசி ஒழுங்குமுறை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
