நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கைப்பேசி பின்னால் மறைந்த அதிர்ச்சி உலகம்: பள்ளி மாணவரின் ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தை உலுக்கியது

கூச்சிங்: 

தனது கைபேசியில் குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து பாவில் உள்ள பள்ளியின் ஆறாம் படிவம் மாணவருக்கு அவர் 21 வயதை அடையும் வரை, இங்குள்ள ஹென்றி கர்னி பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டும் என்று இன்று செக்க்ஷன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2017 ஆம் ஆண்டின் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் (SOACA) பிரிவு 26(1) கீழ், அந்த இளைஞர் அந்த நிறுவனத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலம் முழுவதும், மறுவாழ்வு ஆலோசனை அமர்வுகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி முஸ்லி அப்துல் ஹமித் உத்தரவிட்டார்.

கூடுதலாக, விடுவிக்கப்பட்ட பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு பாவில் உள்ள போலிஸ் மேற்பார்வையின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது எஸ்.டி.பி.எம் படிப்பை முடிப்பதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் பள்ளி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது.

சமூக நலத் துறையிலிருந்து குற்றவாளியின் சமூக அறிக்கையைக் கேட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி, குற்றஞ்சாட்டப்பட்டவர், SOACA 2017-ன் கீழ் இருந்த இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றத்தைப் புரிந்ததாக ஒப்புக்கொண்டார்.

முதல் குற்றச்சாட்டில், குழந்தைகளுக்கான ஆபாசப் படங்கள் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டதாக, அந்தச் சட்டத்தின் பிரிவு 8-ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையோடு குறைந்தபட்சம் மூன்று பிரம்படிகளும் விதிக்கpபடலாம்.

அதே சட்டத்தின் பிரிவு 10-ன் கீழான இரண்டாவது குற்றச்சாட்டில், குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது நவீன கைப்பேசியில் குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றத்திற்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அதிகபட்சம் 10,000 ரிங்கிட் அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி, இரவு 9.10 மணியளவில், பாவில் உள்ள ஒரு கிராமத்தில் இந்தக் குற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset